உப நட்சத்திரம் என்றால் என்ன?
உதாரணமாக அஸ்வினி என்ற நட்சத்திரத்தை எடுத்து கொள்வோம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆகும். இந்த அஸ்வினி என்ற நட்சத்திரம் 9 பாகமாக பிரிக்கப்படுகின்றது. அதன் முதல் பகுதி கேதுவிற்கும், மற்ற பிரிவுகள், சுக்கிரன், சூரியன், சந்திரன் என தசை முறைப்படி அமையும்.
அதாவது ஒரு தசா ஆரம்பிக்கும் போது முதல் புத்தி எப்படி தசா நாதனின் சுய புத்தியாக வருகின்றதோ அதே முறைப்படி தான் உபநட்சத்திரமும் அமைகின்றது. ஒரு தசாவில் உள்ள அனைத்து புத்திகளும் ஒரே கால அளவை கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு புத்தியும் தன் தசா கால அளவிற்கேற்ப புத்தியின் கால அளவை கொண்டிருக்கும். அதே போல் ஒரு நட்சத்திரத்தில் உள்ள 9 கிரகங்களின் உபநட்சத்திரங்களும் சமமான பாகையை பெற்றிருக்காது.
அதாவது ஒரு நட்சத்திரம் என்பதை தசையாக எடுத்துக் கொண்டால், அந்த தசையில் உள்ள புத்திகளை உபநட்சத்திரங்களாக எடுத்து கொள்ளலாம். இனி இந்த உபநட்சத்திரங்கள் எப்படி பிரிக்கப்படுகின்றன என பார்ப்போம்.
ஒரு நட்சத்திரம் என்பது 130 20, பாகையை கொண்டது. இதை மினிட்டாக மாற்றினால் 130x60+20,=800, மினிட் வரும். இதை செகண்டாக மாற்றினால் 800x60=48000 செகண்டாக வரும். அதாவது 13020, =48000 செகண்ட் ஆகும். இதை 13020,என்பது அனைத்து கிரகங்களின் தசா காலமான 12௦ பிரிவுகளை கொண்டது என வைத்துக்கொள்வோம். அதாவது
48000’ = 12௦ வருடம் (அதாவது 12௦ பிரிவுகள்) 1 பிரிவு = 48000,%120 1 வருடம் (அ) 1 பிரிவு = 400 செகண்ட் ஆகும். அதாவது 1 பிரிவு = ௦௦6’ 40’’ கேது திசை என்பது 7 வருடம் கொண்டது. எனவே கேதுவின் உபநட்சத்திரம் என்பது 400 செகண்ட் x 7 = 2800 செகண்ட்டை கொண்டது. இதை மினிட்டாக மாற்றினால் 2800’%60=46’40’’ என வரும். அதாவது 60)2800’(46’ % 240 = 400 – 360 = 40’’ எனவே கேதுவின் உபநட்சத்திரம் என்பது 0046’40’’என வருகின்றது
அதாவது 130 20, என்ற பாகை அளவை கொண்ட ஒரு நட்சத்திரத்தில் கேதுவின் உபநட்சத்திரம், 0046’40’’ என்ற பாகை அளவை கொண்டது. இதே போல் சுக்கிரனின் உபநட்சத்திரம், ஒரு நட்சத்திரத்தில் எவ்வளவு பாகையை கொண்டிருக்கும் என்பதை பார்ப்போம். சுக்கிரனின் திசை என்பது 20 வருடம் கொண்டது. எனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் என்பது 400 செகண்ட் x 20=8000’ செகண்ட்டை கொண்டது. இதை மினிட்டாக மாற்றினால் 60)8000’’(133’ % 60 = 200 – 180 = 20’’ எனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் 133’20’’ என வருகின்றது. இந்த 133’20’’ ஐ டிகிரியாக மாற்றினால் 133’20’’%60=2013’20’’ என வரும். எனவே சுக்கிரனின் உபநட்சத்திரம் 2013’20’’ என்ற பாகை அளவை ஒரு நட்சத்திரத்தில் கொண்டுள்ளது. அடுத்து இதே போல் சூரியனின் உபநட்சத்திரம், ஒரு நட்சத்திரத்தில் எவ்வளவு பாகையை கொண்டிருக்கின்றது என பார்ப்போம். சூரியனின் திசை என்பது 6 வருடம் கொண்டது. எனவே சூரியனின் உபநட்சத்திரம் என்பது 400’’ செகண்ட் x6=2400’’ செகண்ட்டை கொண்டது. இதை மினிட்டாக மாற்றினால் 2400%60=40’ மினிட் என வரும். அதாவது 13020, என்ற பாகை அளவை கொண்ட ஒரு நட்சத்திரத்தில், சூரியனின் உபநட்சத்திரம் என்பது 0040’00’’ என்ற பாகை அளவை கொண்டது.
இதே போல் மற்ற 6 கிரகங்களுக்கும், ஒரு நட்சத்திரத்தில் உள்ள உபநட்சத்திர அளவை கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டுக் கொள்கின்றேன்.
ஒரு நட்சத்திரத்தில் உள்ள உபநட்சத்திர பாகை அளவு பின்வருமாறு அமையும்.
(D-Degree, M-Minute, S-Second) அதாவது அஸ்வினி என்ற நட்சத்திரத்தினை எடுத்து கொண்டால் உபநட்சத்திரங்களின் அமைப்பு பின்வரும் படத்தின்படி அமையும். நட்சத்திரத்தின் உட்பிரிவான உபநட்சத்திரம், பலன் கூறுவதில் அந்த ஜாதகத்திற்கு தனி தன்மையை நிர்ணயம் செய்ய முக்கிய பங்கு வகிக்கும். அதாவது ஒரு நட்சத்திரத்தில் (130 20’) ஒரு சில அஸ்வினி 130 20’
பகுதிகள் நன்மையும், சில பகுதிகள் தீமையும், வேறுசில பகுதிகள் நடுநிலை என குறிப்பிட்ட ஒரு செயலுக்கு அமையும். ஏனெனில் ஒரு நட்சத்திரத்தின் முழு பகுதியும் ஒரே தன்மையான பலனை தருவதில்லை.
உதாரணமாக ஒரு சமுத்திரத்தின் ஒரு சில பகுதிகளில் பாறைகளும், மற்ற சில பகுதிகளில் மீன் வகைகளும், வேறு சில பகுதிகளில் விலை உயர்ந்த முத்துக்களும் கிடைக்கின்றன. எனவே சமுத்திரம் என்பது பொதுத்தன்மையை மட்டுமே குறிக்கும். சமுத்திரத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிகள் தனி தன்மையை காட்டும்.
எனவே ஒரு கிரகம் ராசி மண்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ளது என்பதை, அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட ராசியில் உள்ளது என்று கூறுவதை விட, அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்று கூறுவதே சிறந்தது. அதை விட அந்த கிரகம் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் உள்ள எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என்று அறிவதே மிகவும் சிறந்தது.
மேற்கண்ட ராசி கட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் எந்த பாகையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியன் என்ற ஒரு கிரகத்தினை எடுத்து கொள்வோம். சூரியன் கடக ராசியில் 120.02’.07’’ பாகையில் உள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
கடகத்தில் 3020’ வரை புனர்பூச நட்சத்திரம் உள்ளது. பிறகு 3020’ முதல் 16040’ வரை பூச நட்சத்திரம் உள்ளது. 16040’ முதல் 3௦0 வரை (கடகத்தில்) ஆயில்யம் நட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட ராசிகட்டத்தில் சூரியன் இருக்கும் இடம் 3020’க்கும் 16040’க்கும் இடைப்பட்ட 120.02’.07’’ பாகையில் அமைகின்றது.
எனவே சூரியன் பூச நட்சத்திரத்தில் உள்ளார். அதாவது சூரியன், சனியின் சாரத்தில் உள்ளார். இனி சூரியன், சனியின் சாரமான பூச நட்சத்திரத்தில் எந்த உபநட்சத்திரத்தில் உள்ளார் என்பதை பின்வருமாறு கண்டுபிடிக்க வேண்டும்.
கடகத்தில் சூரியனின் பாகை 120.02’.07’’ ஆகும். இதில் புனர்பூச நட்சத்திரத்தின் பாகை (3020’) போக மீதி உள்ள பூச நட்சத்திரத்தின் பாகையிலிருந்து உபநட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அதாவது 120.02’.07’’ - 3020’ = 80.42’.07’’ மீதி எனவே கடக ராசியில் பூச நட்சத்திரத்தில் சூரியன் 80.42’.07’’ பாகையில் உள்ளது.
பூச நட்சத்திரத்தில் 70 40’ பாகை முதல் 8046’40’’ வரை சந்திரனின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் (80.42’.07’’) சூரியன் உள்ளது. எனவே சூரியன் சந்திரனின் உபநட்சத்திரத்தில் உள்ளது. அதாவது சூரியன், கடக ராசியில், சனியின் சாரத்திலும், சந்திரனின் உபநட்சத்திரத்திலும் உள்ளது.
அடுத்து சந்திரன் என்ற கிரகத்தினை எடுத்து கொள்வோம். சந்திரன் சிம்ம ராசியில் 170.51’.25’’ பாகையில் உள்ளது.
சிம்ம ராசியில் 13020’ வரை மகம் நட்சத்திரம் உள்ளது. பிறகு 13020’ முதல் 26040’ வரை பூரம் நட்சத்திரமும், 26040’ முதல் 3௦ வரை உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. ராசி கட்டத்தில் சந்திரன் இருக்கும் இடம் 13020’ க்கும் 26040’ க்கும் இடைப்பட்ட 170.51’.25’’ பாகையில் உள்ளது.
எனவே சந்திரன் பூரம் நட்சத்திரத்தில் உள்ளது. அதாவது சந்திரன் சுக்கிரன் சாரத்தில் உள்ளார். இனி சந்திரன், சுக்கிரனின் நட்சத்திரத்திமான பூரம் நட்சத்திரத்தில் எந்த உப நட்சத்திரத்தில் உள்ளார் என பார்ப்போம்.
சிம்மத்தில் சந்திரனின் பாகை 170.51’.25’’ ஆகும். இதில் மகம் நட்சத்திரத்தின் பாகை (13020’) போக மீதி உள்ள பூர நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, சந்திரனின் உப நட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அதன்படி 170.51’.25’’ - 13020’00’’ = 40.31’.25’’ மீதி எனவே சிம்ம ராசியில், பூரம் நட்சத்திரத்தில் சந்திரன் 40.31’.24’’ பாகையில் உள்ளது.
பூரம் நட்சத்திரத்தில் 40 00’ பாகை முதல் 40 46’ 40’’ பாகை வரை செவ்வாயின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் (40 31’ 25’’) சந்திரன் உள்ளது. அதாவது சந்திரன் என்ற கிரகம், சிம்மராசியில், சுக்கிரனின் சாரத்திலும், செவ்வாயின் உபநட்சத்திரத்திலும் உள்ளது.
இதே போல் மற்ற 7 கிரகங்களுக்கும், நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரங்களை கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டு கொள்கின்றேன்.
இதுவரை கிரக உபநட்சத்திரம் என்பதை மட்டும் பார்த்தோம். அடுத்து பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதை பார்ப்போம். இதற்கு முன் பார்த்த அதே ஜாதகத்தினை எடுத்துக் கொள்வோம்.
மேற்கண்ட ஜாதகம் கே.பி. முறையில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் பிறந்த ஒரு நபரின் ஜாதகம் ஆகும்.
(குறிப்பு:- கே.பி.முறையில் ஜாதகம் கணிப்பது எப்படி என்பதை பற்றி நிறைய இந்நூலில் எழுதவில்லை. பலன் கூறுவது எப்படி என்பதை மட்டும் கருத்தில் கொண்டு இந்நூலினை எழுதியதால் ஜாதக கணிதத்திற்கு முக்கியத்துவம் தந்து எழுதவில்லை.
கே.பி.முறையில் கணிதம் சார்ந்த நூல்களை சென்னையில் உள்ள திரு.K.S.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் தவப்புதல்வர்களான திரு.K.ஹரிஹரன் (அண்ணாசாலை), திரு.K.சுப்ரமணியன் (மயிலாப்பூர்) ஆகியோரை தொடர்பு கொண்டு அன்பர்கள் பெறவும்.
இன்று கணினிகளும், ஜோதிட மென்பொருட்களும் இருப்பதால், ஆரம்பநிலை (ஜோதிடத்தில்) அன்பர்கள் மேற்கண்டவற்றை பயன்படுத்தி கணித சுமைகளை குறைப்பதே சிறந்த பலனை தரும். இருப்பினும் கணித முறைகளை ஜோதிடர்கள் தெரிந்து கொள்வது சிறப்பு).
இந்த ஜாதகத்தில் லக்னபாவம் தனுசு ராசியில் பாகையில் ஆரம்பிக்கின்றதோ அந்த பாகைதான் லக்னபாவ ஆரம்பமுனை என பார்த்தோம். லக்னத்தை போல் மற்ற பாவங்கள் எந்த பாகையில் ஆரம்பிக்கின்றதோ அதுவே அந்த அந்த பாவத்தின் ஆரம்பமுனைகள் என்று அழைக்கக்கப்படுகின்றது.
ஒரு ஆரம்பமுனை என்பது ஒரு ராசி அதிபதியையும், ஒரு நட்சத்திர அதிபதியையும், ஒரு உபநட்சத்திரத்தையும் கொண்டது ஆகும். அதன்படி ஆரம்பமுனை தனுசு ராசியில் 220 03’ 26’’ பாகையில் விழுகின்றது. இதில் லக்னத்தின் பாவ அதிபதி குரு எனவும், மேற்கண்ட பாகை தனுசு ராசியில், பூராட நட்சத்திரத்தில் உள்ளதால், லக்னத்தின் பாவ நட்சத்திர அதிபதி சுக்ரனாகவும் அமைகின்றது.
லக்னபாவ உபநட்சத்திரத்தை, கிரகங்களுக்கு எப்படி உபநட்சத்திரம் கண்டு பிடித்தோமோ அதே மாதிரி கண்டுபிடிக்க வேண்டும். அதாவது லக்னபாவம், தனுசு ராசியில் 220 03’ 26’’ பாகையில் விழுகின்றது.
தனுசு ராசியில் 13020’ வரை மூல நட்சத்திரம் உள்ளது. பிறகு 13020’ முதல் 26040’ வரை பூராட நட்சத்திரமும், 26040’ முதல் 300 வரை உத்திராடம் நட்சத்திரமும் உள்ளது. ஜாதக கட்டத்தில் லக்ன பாவத்தின் ஆரம்பமுனை 13020’-க்கும் 26040’-க்கும் இடைப்பட்ட 220 03’ 26’’ பாகையில் உள்ளது.
எனவே லக்னபாவ ஆரம்பமுனை பூராட நட்சத்திரத்தில் உள்ளது. அதாவது லக்னபாவ ஆரம்பமுனை, சுக்கிரனின் சாரத்தில் உள்ளது. இனி லக்னபாவ ஆரம்பமுனை சுக்கிரனின் நட்சத்திரமான பூராட நட்சத்திரத்தில், எந்த உபநட்சத்திரத்தில் உள்ளது என பார்ப்போம்.
தனுசுவில் லக்னத்தின் பாகை 220 03’ 26’’ ஆகும். இதில் மூல நட்சத்திரத்தின் பாகை (13020’) போக மீதி உள்ள பூராட நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, லக்னபாவத்தின் உபநட்சத்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.
அதன்படி 220 03’ 26’’ - 130 20’ 06’’ = 80 43’ 26’’ மீதி
எனவே தனுசு ராசியில், பூராட நட்சத்திரத்தில், லக்னபாவம் ஆரம்பமுனை 80 43’ 26’’ பாகையில் விழுகின்றது
பூராட நட்சத்திரத்தில்,8033’20’’பாகையிலிருந்து100 40’00’’ பாகை வரை சனியின் உபநட்சத்திரம் உள்ளது. மேற்கண்ட பாகைக்கு இடைப்பட்ட பாகையில் தான் (8043’26’’) லக்ன பாவத்தின் ஆரம்பமுனை விழுகின்றது. எனவே லக்ன பாவ ஆரம்பமுனையின் உபநட்சத்திரம் சனி ஆகும். அதாவது லக்னபாவ ஆரம்பமுனை, தனுசு ராசியில், சுக்கிரன் சாரத்திலும், சனியின் உபநட்சத்திரத்திலும் விழுகின்றது.
இதே போல் மற்ற 11 பாவமுனைகளுக்கும், நட்சத்திரம் மற்றும் உபநட்சத்திரங்கள் கணக்கிடுமாறு வாசகர்களை கேட்டு கொள்கின்றேன்.
இதுவரை கிரக உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதையும் பாவ உபநட்சத்திரம் என்றால் என்ன என்பதையும் வாசகர்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்.
வாசகர்கள் கணித சுமையை குறைக்கும் பொருட்டு, ராசி மண்டலத்தின் உள்ள 249 அட்டவணையை அடுத்து வர உள்ள பக்கங்களில் தரப்பட்டுள்ளது.