ஒன்பதாம் ஆண்டு சார ஜோதிட (STELLAR ASTROLOGY) மாநாடு
அகில இந்திய சார ஜோதிடர்கள் சங்கத்தின் நிறுவனர் திருA.தேவராஜ் அவர்களின் தலைமையில் 25-01-2015 அன்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஸ்ரீ காமாட்சி திருமண மண்டபத்தில் ஒன்பதாம் ஆண்டு சார ஜோதிட மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டின் மூலம் 186 நபர்களுக்கு "ஜோதிஷ ஆதித்யா" பட்டமும், உயர் கணித சார ஜோதிட முறையை கற்பித்த ஆசிரியர்களுக்கும், இம்முறையை பற்றி நூல் எழுதிய எழுத்தாளர்களுக்கும் நமது சங்கத்தின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான ஜோதிட ஆச்சார்யா விருதினை இந்த வருடம் திரு.K.வளர்ராஜன், திரு.R.ஜெயபாலன், திருமதி.N.ரேவதி, திரு.S.சீனிவாசன், திரு.R.ஜெயராமன் திருமதி.R.கல்யாணி ஆகியோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் ஜோதிட நல்லாசிரியர் திரு.A.தேவராஜ் அவர்கள் எழுதிய ஜாதகத்தில் கல்வி என்ற நூலும், ஜோதிட ஆச்சார்யா திருமதி.N. ரேவதி எழுதிய சார ஜோதிட குறிப்புக்கள் நூலும் வெளியிடப்பட்டது. சார ஜோதிட அடிப்படையில் ஜோதிட அறிஞர்கள் பலரின் கட்டுரைகள் அடங்கிய மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
மாநாடு சிறப்புற நடக்க உதவிய மாநாட்டின் தலைவர் திரு.P.S.சுதர்சன், மலர் வெளியிட்டு குழு தலைவர் திரு.M. ஏகாம்பரம் மற்றும் துணை தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது நன்றி.