மாதந்திர ஜோதிட கருத்தரங்கம்:
எமது பயிற்சி மையத்தில் உயர்நிலை சார ஜோதிட (KP Astrology) பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் எம்மால் நிறுவப்பட்ட அகில இந்திய சார ஜோதிட சங்கத்தின் உறுப்பினர்களாக ஆக்கப்படுகின்றனர். எமது சங்கத்தில் உறுப்பினர் ஆவதற்கு எமது பயிற்சி மையத்தில் பயின்ற ஜோதிட அன்பர்களுக்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை ஒவ்வொரு மாதமும் மூன்றாவது சனிக்கிழமை மதியம் 2.00 மணிமுதல் 5.30 மணி வரை மாதந்திர ஜோதிட கருத்தரங்கம் நடைபெறும்.
இதுவரை (2017 ஜூலை மாதம் வரை) 120 ஜோதிட மாதாந்திர கருத்தரங்கம் சிறப்பான முறையில் நடத்தி உள்ளோம். பொதுவாக இந்த மாதாந்திர ஜோதிட கருத்தரங்கில் சுமார் 70 முதல் 90 மாணவர்கள் வரை கலந்துகொண்டு தங்கள் ஜோதிட சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொண்டும், தங்கள் கருத்துகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டும் வருகிறார்கள்.
இந்த கருத்தரங்கத்தில் மூத்த ஜோதிட அறிஞர்களின் அறிமுகம் மற்றும் அனுபவங்கள் புதிய ஜோதிட மாணவர்களுக்கு பெரிதும் உதவி புரியும். தொடர் பயிற்சி, கூட்டு முயற்சி, கூட்டு சிந்தனை போன்றவற்றின் மூலம் உயர் கணித சார ஜோதிடத்தினை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது தான் இந்த மாதாந்திர கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும் புதிய மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் ஒரு பாலமாக இந்த மாதாந்திர ஜோதிட கருத்தரங்கம் (Monthly Astrology Meeting ) அமையும்.
இந்த மாதந்திர ஜோதிட கருத்தரங்கத்தில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பாவத்தின் கொடுப்பினையை விரிவாக அலசுதல், அதாவது ஆய்வுக்கு எடுத்து கொண்ட ஒரு பாவத்தின் எல்ல வித காரகங்களையும் (அகம், புறம் சார்ந்த) பல கோணங்களில் அலசுதல். மேற்கண்ட பாவம் மற்ற 12 பாவங்களுடன் கொள்ளும் தொடர்புகளால் உண்டாகும் விளைவுகளையும், மற்ற 12 பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்து கொண்ட பாவத்தினை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையும் விரிவாக அலசுதல்.
மேலும் தசா, புத்திகள் மீது மேற்கண்ட பாவம் செலுத்தும் ஆதிக்கத்தையும் விளக்குதல். எம்மால் எழுதப்பட்ட புத்தகத்தில் உள்ள விதிகளுக்கான விளக்கங்களையும், சந்தேகங்களையும் இந்த மாதாந்திர கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்படுகிறது
மாதந்திர கருத்தரங்கத்தில் கலந்து கொள்ள நுழைவு கட்டணம் ரூபாய் 150/- மட்டும்.